Friday, July 17, 2015

ஆங்கிலம் நம் எதிரி அல்ல


"நாம் தமிழர்கள் .. ஆங்கிலம் நமக்குத் தேவையில்லை", என்று நம்மில் பலர் கூறுவதைக் கேட்டதுண்டு. இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை. சொல்பவர்களின் அறியாமையை எண்ணிக் கவலை கொள்கின்றேன். ஆங்கிலேயர் நம்மை அடிமைப் படுத்தியது உண்மை. அதை நான் மறுக்கவில்லை. அதோடு, ஆங்கிலம் தமிழை அழித்துவிடுமோ என்ற அச்ச உணர்வு நம்மில் தோன்றுவது இயற்கையான ஒன்றே. அதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக ஆங்கில மொழியயே மொத்தமாகப் புறக்கணிப்பது நிச்சயம் தவறாகும். அது இக்காலகட்டத்திற்குப் பொருந்தாத செயலாகும். ஆங்கிலத்தை ஏற்றும் தமிழை நம்மால் பாதுகாக்க முடியும். ஆங்கிலத்தை படிக்காமலே தமிழை காப்பது மிகச்சுலபம். ஆனால், ஆங்கிலம் நன்று கற்றபின்பும் தமிழை மறக்காமல் காப்பதே கடினமான செயல். நீங்கள் உண்மையும் தமிழ்ப் பற்று கொண்டவர் என்றல் இதை முயன்று வெற்றி காணுங்கள். பின்பு இந்த உலகம் உங்களைப் போற்றும்.

உலகப் புகழ் பெற்ற நம் கவிஞர் பாரதியார் ஷெல்லியின் கவிதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் இலகணங்களையும், படைப்புக்களையும் பற்றி நன்கு கற்று உணர்ந்தவர். அவர் தமிழ் மீது கொண்ட பற்று பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதற்காக அவர் ஆங்கிலத்தை வெறுத்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கால கட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு இன்றியமையாததாக ஆகிவிட்டது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தம் படைப்புக்களை ஆங்கிலத்திலேயே படைக்கின்றனர். அவற்றை மாணவர்கள் கற்க வேண்டுமென்றால் ஆங்கில அறிவு நிச்சயம் தேவை. அத்துடன் இன்று வேலைவாய்ப்பிற்கு ஆங்கிலம் மிக அவசியமான ஒன்று. அங்கிலம்  என்பது இன்றைய காலத்திற்கு தேவையான ஒன்றாகிவிட்டது. அதை எதிரியாகப் பாராமல், உலகில் உள்ள மற்ற மொழிகளைப் போல அதையும் ஒரு மொழியாக நாம் பார்க்க வேண்டும். நாளை நமக்கு ஜெர்மன் மொழி கற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதைக் கற்பதில் தவறில்லை. ஆனால் எம்மொழியக் கற்றாலும் நம் தமிழ் மொழியின் பழமையும் பெருமையும் என்றும் மாறப்போவதில்லை. அதைப் போற்றிக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை ஆகும். நம் குழந்தைகளுக்கு வகுப்பறையில் ஆங்கிலம் கற்றுத் தந்தால் நீங்கள் வீட்டறையில் தமிழ் கற்றுக் கொடுங்கள். பள்ளிகளைக் குறைகூறிக கொண்டிருப்பதால் எப்ப்ரயோஜனமும் இல்லை என்பதை உணருங்கள்.

உங்கள் இல்லங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு நாழிதழ்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். என் வீட்டில் தினம் 'The Hindu' தமிழிலும் ஆங்கிலத்திலும் வாங்குகிறேன். மாதம் நம் மொழி அறிவையும், பொது அறிவையும் வளர்க்க முந்நூறு ருபாய் செலவு செய்வதில் தவறில்லை என்று நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!!!

Wednesday, July 15, 2015

பசி என்னும் அரக்கன்

மாலை ஏழு மணி இருக்கும் என்று நினைக்கின்றேன். ஓ எம் ஆர் சாலையில் உள்ள ஒரு சிறு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வெளியே வந்து நின்றிருந்தேன். காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே வீட்டிற்கு சென்றவுடன்  செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

சில நேரம் கழித்து ஒரு சிறுவனின் விரல்கள் என் மீது பட்டதை உணர்ந்து சட்டென திரும்பிப்பார்த்தேன்.  ஒரு ஏழைச் சிறுவன் கையில் சில புத்தகங்களோடு நின்றுகொண்டு என்னை பார்த்து, "அண்ணா book வாங்கிகோங்க ணா  .... காலேல இருந்து ஒரு book கூட விக்கல .. ரொம்ப பசிக்குது ணா " என்றான். சற்று யோசித்த நான் "இல்லப்பா எனக்கு வேண்டாம் " என்று சொல்லிவிட்டு என் யோசனைகளைத் தொடர்ந்தேன். சிறுவன் விடவில்லை . மீண்டும் என்னை தொட்டு அழைத்து "அண்ணா please ஒரே ஒரு புக் மட்டும் வாங்கிகோங்க ... பத்து ரூபா தான்", என்று கெஞ்சினான். சிறுவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, "சரி கண்ணா book லாம் வேண்டாம். நீ எங்க இருக்க ? உன் அப்பா அம்மா லாம் எங்க?" என்று வினவினேன். "அப்பா இல்ல. அம்மா வீட்ல இருக்காங்க. இங்கதான் ஓடை பக்கத்துல இருக்கோம். ", என்று வெகுளியாய் பதிலளித்தான். "சரி அம்மா வேலைக்கு போகலைய ... நீ படிக்கலாமே ... ஏன் அவங்க என்ன பண்றாங்க ?", என்று கேட்க , "அம்மா வேலைக்கு போறாங்க ... நான் book விக்கிறேன். வீட்ல பாட்டி, தம்பி இருக்காங்க", என்று எதார்த்தமாக பதில் கூறினான். "சரி இந்த book லாம் எங்க வாங்குற?" என்று ஆர்வமாய் கேட்டதற்கு, "parrys ல போய் வாராவாரம் வாங்கிட்டு வந்து இங்க விப்போம். அங்க கம்மி விலைக்கு கிடைக்கும்", என்றான்.

"சரி எனக்கு book லாம் வேண்டாம். சாப்பாடு வாங்கி தரேன். வீட்டுக்கு கொண்டு போறியா?", என்று வினவ, குழந்தைத்தனத்தோடு தலை அசைத்தான். அருகில் நான் சற்று நேரம் முன்பு உண்டு விட்டு வந்த "சர்வர்  சுந்தரம்" உணவகத்தில் ஐந்து தோசைகளை parcel கட்டச்சொன்னேன். கடைக்காரர் என்னையும் அந்தச்சிறுவனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தார். நான் parcel லைப் பெற்றுக்கொண்டு அவன் கொண்டு வந்திருந்த புத்தகப்பைக்குள் வைத்துவிட்டு, "கண்ணா! பத்தரமா கொண்டு போய் வீட்ல சாப்புடுங்க .." என்றேன். எதார்த்தமாக தலை அசைத்தவன் முகத்தில் வெகுளித்தனம் தெரிந்ததே தவிர ஆனந்தமோ சோகமோ தென்படவில்லை. என் மனம் மகிழ்ச்சியோடு பெருமூச்சு விட்டது :)


அன்று பல கேள்விகள் தோன்றின . இன்று இவன் பசி ஆற்றிவிட்டாகியது. நாளை அவன் என்ன செய்வான்.? இதேபோல் புத்தகங்களைச் சுமந்துகொண்டு வீதிகளை வலம் வருவான். இவன் எதிர் காலம் என்னவாகும் ? இதேபோல் சுற்றித்திரியும் சிறுவர்களுக்கும் அதே நிலைமைதான். இதற்கு தீர்வுதான் என்ன ? என்னால் தற்போதைக்கு முடிந்த இரண்டு வழிகளை யோசித்தேன். உங்களுக்கும் பகிர்கிறேன்.

1. இன்றைய பசியை போக்க அன்னதானம். அன்னதானதிருக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். மேலும் முடிந்தவரை பசியில் இருபோரைக்கண்டால் நிச்சயம் உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாங்கும் சம்பளத்தில் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடுக்காதவன் நிச்சயம் சுயநலவாதியே ! நான் சுயநலவாதிய வாழ விரும்பவில்லை ..

2. நாளைய பசியைப்  போக்க கல்வி ஒன்றே வழி. ஏழைக் குழந்தைகளுக்கு HOPE Foundation இல் பாடம் சொல்லிக்கொடுதுக்கொண்டிருந்த எனக்கு அன்று ஒரு ஊக்கம் கிடைத்தது.

"தானத்தில் சிறந்தது அன்னதானம்", என்று சொல்வதுண்டு. பழமொழி ஒரு பக்கம் இருக்க, அதனால் நம் மனம் அடையும் நிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. பசி என்று ஒன்று இல்லையெனில் இவ்வுலகம் இன்று  இவ்வாறு இயங்கிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. பசியாறிய ஒருவன் தரும் ஆசிர்வாததின் மகிமை வேறெதில் உண்டு ? நீங்களும் உங்களால் முடிந்தவரை உங்களைச்சுற்றியுள்ளவர்களின் பசி போக்க முயற்சி செய்யுங்கள். நூறுமுறை கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதில் கிடக்கும் நன்மையை விட ஒரு மனிதனின் பசியைப் போக்குவதில் கிடைக்கும். கருணை உள்ளம் கொண்ட உங்களுக்கு அந்தக் கடவுளும் கருணையைப் பொழிவார்! கருணை உள்ளம் இல்லாதவர்கள் எவ்வாறு கடவுளின் கருணையை எதிர்பார்க்க முடியும் ? :)

மேலும் உங்கள் அருகில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். கல்வி வியாபாரம் ஆயக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சிறிதேனும் உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அறிவைப் பகிர்ந்து கொள்வதால் நம் அறிவு மென்மேலும் வளருமே தவிர மங்கி விடாது என்பதை உணர்வோம் . நாளை இதுபோல சிறுவர்கள் கதியின்றி சுற்றிதிரிவதை நாம் நினைத்தால் நிச்சையம் தடுக்க முடியும் !!!
   

Wednesday, July 8, 2015

Productivity Doesn't Mean Working 24 Hours A DayOne of the most frequently used terms in the industry in 'productivity'. Many a time it is misunderstood, because of the misled portrayal by experienced employees. They manifest a wrong idea of productivity, which sends a wrong signal to the new comers, thereby corrupting the entire ecosystem.

Productivity is not about number of hours, but number of quality hours spent on a task. For instance, in our homes, we see our younger brothers and sisters open a book on the desk and stare at it. It doesn't mean that they are actually involved. Their mind is roaming around the dream world, and it shows a wrong picture to us. Similarly, in an industry, productivity doesn't mean spending the whole day in office. It is about spending quality hours, focussing on the task, involving into the assignment and diverting the energy to it. This is something to deal with the mind and not with the physical presence. Many a time, employers doesn't understand this and this would lead to misleading recognitions among employees, which would discourage a true performer.

It is essential to have a conducive environment where a mind can think freely without any other influences. Such an environment would definitely increase the productivity of an employee and also enable to create a productive environment. Compassion is the most important trait required to achieve such an environment. Treating an employee equally will itself create the necessary environment required for reaping maximum productivity. This would also keep the employee involved and bonded within the team rather than feel isolated and fed up. Equality will bring inclusiveness, inclusiveness will trigger involvement in the employee, involvement will make him accountable and accountability brings productivity !

Monday, July 6, 2015

Worrying About Past Is Painful, But All Was Well!

Everyone of us have problems. Many a time we forget the fact that problems come to everyone but in different forms. Relax that you are able to manage the problems. When it comes to relationships, it is too severe to take it light. But, it happens for all! Believe me!

When you think about the past mistakes, because of which you are struggling now, it is near to no use! It is always better to find a way to correct it as soon as possible rather than lament for the past mistake, which has become the reason for your troubles now. It is a universal truth that man is the architect of his/her own future. The decisions that you make today is going to affect your future. So, the effect of your past decisions is what you are today! And if you had made a mistake in the past, you would be suffering for it now. But, it is not all over. You can correct it by analysis.

Sit and think what was the mistake? How complicated you have made it now? What are all the possibilities available now to get rid of it? And which solution you are going to choose among them. You have to plan a strategy today to solve it. Unless you decide and plan a strategy to work on and solve the problem. You will keep lamenting. Do a thorough analysis of the pros and cons of choosing a strategy and proceed to execute it. Think about the welfare of people impacted with your decision, like, your parents, relatives, friends, etc. You can even write them down in a paper if you are not a good thinker. It's all about planning and executing in your own way rather than copying solution from some one else, which will never work. Because, for everyone of us, the context of the problem differs. You cannot fit the same solution to your problem, that some one else had used. This logic is applicable only for simpler problems, whereas the ones for which you are worrying for so long would be complex.

So, stop lamenting today and start to correct them. Of course, some decisions are painful, but you will not regret for them in future. Only through this way you will come out of your problems. Believe that everything on this earth happens for a reason and it will lead you to a good beginning soon!!!

Saturday, June 20, 2015

The Book That Transformed Me

Long ago, I was like a typical IT professional leaving parents at my home town and heading to Chennai, India for working in an IT company. Hardly did I call my parents and involved myself in making them happy. I was so excited about work and didn't pay much attention to spend time with my family. Honestly, I took them for granted. I didn't realise that time has changed and in this fast moving world, an extra effort is required to spend time with your family and make them happy, unlike those good old days when parents were with their children all along their life and mostly people were working locally rather than moving to distant places.

I dedicated most of my time programming and didn't pay much attention on the other side of life, which is quite natural with a student just out from college. But, it should not last long and there should be a point in life when I should realise the importance of life, the importance of living life with loved ones, putting family on priority and spending time with them. There should be a point in life when I should realise that when there arise a conflict between personal and professional lives, I should choose to stand by my personal life rather than professional life. There should be a point in life when I should realise that though I love my job, I should have the perception that it is after all a means to make a living rather than something which can cost my personal life.

Nobody taught about this perception and trust me, many time, no one does it for you too! It is we, who should pause and introspect and get to know this philosophy in life as we grow. The balance factor of personal and professional life. Uncompromising personal for professional. Putting some efforts to make your family happy, in this fast moving life, as the renowned psychiatrist Dr. Shalini rightly pointed out.

And.. I met that point of realisation when I came across a book. I was roaming around the city in search of a book to present my uncle for his birthday and I was stuck by a book and in addition to presenting for my uncle, I purchased a copy for myself. Every time I read the pages of the book, I realised my ignorance , understood the real meaning of life and undergone a real transformation of my life. Shifted more towards loving my family, putting efforts to make them happy, compassionate towards them, showing more love to my fellow beings, and finally all together my perception of life was transformed.. From then, when I had a conflict with personal and professional lives, I always chose my personal life. The book taught me that love is above everything in this world, job, money, career, aspirations and what not..! And the book is non other than the most popular "The Monk Who Sold His Ferrari" by Robin Sharma.. You can also get a copy of it and get yourself transformed...